பெரம்பலூர் செட்டிகுளம் காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் ஆலய தைப்பூச திருத்தேரோட்டம் - பெரம்பலூர்
பெரம்பலூர்:ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். குபேர பரிகார ஸ்தலமான இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவானது ஜன.27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் தைப்பூசத்தை ஒட்டி இன்று நடைபெற்றது.
அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் ஒரு தேரிலும், வள்ளி தெய்வானை முருகப்பெருமான் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்வில் செட்டிகுளம், ஆலத்தூர், பாடாலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.