தமிழ்நாடு

tamil nadu

பல்லக்கில் பவனி வந்த தங்கை மகள்.. 16 மாட்டு வண்டிகளில் சீர் செய்து அசத்திய தாய்மாமன்

ETV Bharat / videos

பல்லக்கில் பவனி வந்த தங்கை மகள்.. 16 மாட்டு வண்டிகளில் சீர் செய்து அசத்திய தாய்மாமன் - erode news

By

Published : May 23, 2023, 12:57 PM IST

ஈரோடு மாவட்டம்,அந்தியூர் அருகே உள்ள நல்லகவுண்டன்கொட்டாயில் அர்ஜுனன் - ராதாமணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் அனன்யா. இந்த நிலையில், அனன்யாவுக்கு பூப்பு நன்னீராட்டு விழா அந்தியூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. 

இந்த பூப்பு நன்னீராட்டு விழாவிற்காக அனன்யாவின் தாய்மாமன் மற்றும் மாமன்மார்கள் என அனைவரும் சேர்ந்து 16 மாட்டு வண்டிகளில் சீதனம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அனன்யாவை பல்லாக்கில் வைத்து, சுமந்து சென்ற தாய்மாமன் மற்றும் மாமன்கள், பாரம்பரிய முறைப்படி பூப்பு நன்னீராட்டு விழாவை நடத்தினர். 

இவ்வாறு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர் கொண்டு வந்து, பூப்பு நன்னீராட்டு விழாவை நடத்திய தாய்மாமன் மற்றும் மாமன்மார்களை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும், இது குறித்து தாய்மாமன் கூறுகையில், “முன்பெல்லாம் மாட்டு வண்டியில்தான் தாய்மாமன் சீர் கொண்டு செல்வார்கள். 

ஆனால், தற்போதைய தலைமுறையினருக்கு இவை எல்லாம் தெரியாது. எனவே, நமது பாரம்பரிய முறைகளை தற்போதைய சந்ததியினருக்கு கற்றுக் கொடுப்பதற்காக, இது போன்று மாட்டு வண்டியில் சீர் கொண்டு வந்து விழா நடத்தினோம்” எனத் தெரிவித்தார்.  

ABOUT THE AUTHOR

...view details