AadiPooram வழிபாடு: குற்றால அருவியில் குவியும் பெண்கள்! - புலிஅருவி
தென்காசி:தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. அங்கு இதமான சூழல் நிலவி வரும் நிலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலிஅருவி உள்ளிட்ட அருவிகளுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக, விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படும் சூழலில், இன்று ஆடிப்பூரம் என்பதால் ஏராளமான பெண்கள் அங்கு வருகை தந்து குற்றாலம் அருவிகளில் புனித நீராடிச் செல்கின்றனர். ஆடிப்பூரம் தினத்தன்று அருவிகளில் புனித நீராடி பெண் தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பாக்யம் நிலைக்கும் எனவும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் புராணங்கள் கூறிவரும் சூழலில் இதை அப்பகுதி மக்கள் முழுமையாக ஏற்று இந்த வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
இதனால் அங்குள்ள அனைத்து அருவிகளிலும் கூட்டம் களைகட்டியுள்ளதால் பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து புனித நீராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வியாபாரமும் களைகட்டியுள்ள நிலையில் அங்குள்ள சிறு,குறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:"கோவையில் ஒரு ஃபகத் பாசில்": வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற நபர் கைது!