தமிழ்நாடு

tamil nadu

தென்காசி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விபத்தில் மரணம்

ETV Bharat / videos

தென்காசி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விபத்தில் மரணம்: 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்! - கரிவலம்வந்தநல்லூர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 9:17 PM IST

தென்காசி: கரிவலம்வந்தநல்லூர் பகுதி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (54). கடந்த 12ஆம் தேதி இரவு கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி பகுதியில் ஆடுகள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் விசாரணைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பருவக்குடி சந்திப்பு சாலை  என்ற இடத்தில், திரும்பும் போது எதிர்த் திசையில் வந்த லாரி, ராஜேந்திரன் பைக் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் ராஜேந்திரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ராஜேந்திரனைப் பரிசோதித்த மருத்துவர்கள், முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, சொந்த ஊரான மேலமருதப்புரம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ராஜேந்திரன் உடல் இன்று மாலை தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதிர் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details