74th Republic Day: தென்காசியில் 257 பேருக்கு கெளரவம்! - தென்காசி மாவட்ட செய்திகள்
தென்காசி: நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையிலான காவல் துறை அணிவகுப்பை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சமாதான புறாவை பறக்க விட்டார். பின்னர், காவல் துறையின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். மேலும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 257 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். அதேநேரம் 21 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.