Video: தென்காசியில் வீணான குடிநீரில் குளியல் போட்ட 'ரவுசு' இளைஞர்கள்! - தென்காசியில் வீணான குடிநீரில் குளியல் போட்ட இளைஞர்
தென்காசி:தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் பஜார் தெருவில் நேற்று (மே 30) இரவு தாமிரபரணி ஆற்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி அதிகமாக சென்றது. இதனை அந்த பகுதியில் உள்ள ராபின், விக்னேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் அருகில் உள்ள கடையில் சோப்பு வாங்கி துணி துவைத்து குளித்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள வேறொரு நபர் இந்தச் செயலை செல்போனில் படம் பிடித்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாகவும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST