ஒண்ணு இல்ல.. ரெண்டு இல்ல.. மூணு.. கோவில்பட்டியில் ஒரே நாளில் 3 கோயிலில் திருட்டு! - thoothukudi news updates
தூத்துக்குடி:கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோயில் சாலையில் மேட்டு காளியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் அடுத்தடுத்து இருந்த மூன்று கோயில்களில் இரவில் மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
இன்று காலையில் வந்த கோயில் பூசாரிகள் கோயில் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சடைந்தனர். இதனைத்தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் மூன்று கோயிலின் உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'இறந்துபோன உங்க அம்மா கூட பேசுறேன்'என ரூ.2 கோடி வரை சுருட்டிய கேரள போலி மந்திரவாதி கைது!