தமிழ்நாடு

tamil nadu

வீடியோ வெளியிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

ETV Bharat / videos

‘எனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை’.. வீடியோ வெளியிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை!

By

Published : Jul 4, 2023, 10:22 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் கலைஞர் நகரைச் சேர்ந்தவர், பெருமாள் சாமி (47). திருவேங்கடத்தில் உள்ள அரசு மதுபானக் கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணி செய்து வருகிறார். நேற்று (ஜூலை 06) பெருமாள் சாமியின் மனைவி சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அருகில் உள்ள நல்லூர் சென்றுள்ளார். 

அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெருமாள் சாமி தனது மைத்துனர் ஒருவருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் வாழத் தகுதியற்றவனாக ஆகிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் இத்துடன் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன், என் மரணத்திற்கு என் மனைவி மற்றும் குடும்பத்தார்கள் யாரும் காரணம் இல்லை.

நான் இந்த உலகத்தை விட்டு பிரிகிறேன். மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். காவல் துறைக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என் மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பெருமாள் சாமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இறந்துகிடந்தார். உடனடியாக அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, அங்கிருந்த உறவினர்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Online Rummy - ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ராணுவ வீரர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details