பழனியில் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்த ஆளுநர் ரவி! - தங்கத் தேர் இழுத்த ஆர் என் ரவி
Published : Aug 24, 2023, 10:43 PM IST
திண்டுக்கல்: பழனி கோயிலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆக.24) சென்றார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆளுநர் இன்று மாலை பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றார். கோவையில் இருந்து கார் மூலம் பழனிக்குச் சென்ற ஆளுநர் ரவியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, டிஐஜி அபினவ்குமார், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து மின் இழுவைரயில் மூலம் மலைக்கோயிலுக்கு மேலே ஆளுநர் சென்றார். அங்கு ஆளுநருக்கு பழனி திருக்கோயில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆளுநரை அதிகாரிகள் வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பழனி கோயிலில் நடைபெற்ற சாயரட்சை பூஜையில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த பழனியாண்டவரை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து போகர் ஜீவசமாதியில் வழிபாடு நடத்திய ஆளுநர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பினார். ஆளுநரின் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் சரக உள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.