தமிழ்நாடு

tamil nadu

வாணியம்பாடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழர் பண்பாட்டுத் திருவிழா

ETV Bharat / videos

வாணியம்பாடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழர் பண்பாட்டுத் திருவிழா..! - Tamilar Panpattu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 7:48 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தமிழர் பண்பாட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் வேர்கள் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் பண்பாட்டுத் திருவிழாவை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி நேற்று (ஜன.5) துவக்கி வைத்தார். 

இந்த பண்பாட்டுத் திருவிழாவில், முதல் நாளான நேற்று பரதநாட்டியம், பெரிய மேளம் மற்றும் பள்ளி மாணவர்களின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பம்பை ஆட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், கருப்பசாமி ஆட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கோலாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இந்த தமிழர் பண்பாட்டுத் திருவிழாவில் நடைபெற்றது. இதனை அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

மேலும், இந்த பண்பாட்டுத் திருவிழாவில் மூலிகை பொருட்கள், சிறுதானியங்கள், மற்றும் இயற்கை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த தமிழர் பண்பாட்டுத் திருவிழாவில் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த பண்பாட்டுத் திருவிழாவானது ஜன.5 முதல் ஜன.7 வரை மூன்று தினங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details