தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் பாதுகாப்பான மாநிலமாகும் - குஜராத் அமைச்சர் ருஷிகேஷ்பாய் படேல்

ETV Bharat / videos

தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாகும் - குஜராத் அமைச்சர் நம்பிக்கை - நெல்லை மாவட்ட செய்தி

By

Published : Mar 25, 2023, 9:11 PM IST

குஜராத் மாநில அரசும் உடன் மத்திய அரசு இணைந்து செளராஷ்டிரா தமிழ்சங்கம் விழாவை நடந்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் செளராஷ்டிரா தமிழ்சங்கமம் விழா, அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் அனந்தராமன் தலைமையில் நடைபெற்றது.  

இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ருஷிகேஷ்பாய் படேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து செளராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீண்ட வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து செளராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.  

இங்கு தமிழ்மக்களோடு இணைந்து தமிழக மக்களாகவே மாறி தொழில், கல்வி, வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.  இங்குள்ள மக்களுக்கு சேவையாற்றியும் வருகின்றனர். அந்த மக்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு, குஜராத் என அனைத்தும் ஓரே நாடுதான். ஒருவரோடு ஒருவர் நன்கு நட்பு பாராட்ட வேண்டும். இரு மாநிலங்களின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை இரு மாநிலத்தவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

தொழில் ரீதியாக, வியாபார ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இந்த செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான அமைதியான மாநிலமாகும். இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்பதிலும் சிறந்தவர்கள் என்று கூறினார். 

ABOUT THE AUTHOR

...view details