தமிழ்நாடு

tamil nadu

பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாண்டிராஜ்

ETV Bharat / videos

‘ஆஸ்கர் விருது பெற தமிழ் படங்கள் முயற்சி செய்து வருகிறது’ - இயக்குநர் பாண்டிராஜ் - நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

By

Published : Mar 18, 2023, 7:08 PM IST

புதுக்கோட்டை:ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆஸ்கர் விருது பெற தமிழ் படங்கள் முயற்சி செய்து வருகிறது. விரைவில் அது நிறைவேறும். என்னுடைய படங்கள் அனைத்தும் குடும்ப பாங்கான படங்கள்தான். அது எந்த விதத்திலும் முகம் சுளிக்காமல் இருக்கும் என்று இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே லேனா விளக்கில் உள்ள செந்தூரன் பொறியியல் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு விழா இன்று (மார்ச் 18) நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், பிரபல திரைப்பட இயக்குநருமான பாண்டிராஜ் கலந்து கொண்டு, மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆஸ்கர் விருது பெற தமிழ் படங்கள் முயற்சி செய்து வருகிறது. 

விரைவில் அது நிறைவேறும். யதார்த்த சினிமாவிற்கும், கமர்சியல் சினிமாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அது சைவ அசைவ உணவு போன்று தான். எனக்கு இதில் இரண்டிலும் பயணிக்க ஆசை. அதிகமான நாவல்கள் திரைப்படமாகி வருகிறது. நானும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். புதுக்கோட்டை வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவம் மிக கேவலமானதும், அறுவருக்கத்தக்கதாகும். இதற்கு முறையான தண்டனை வழங்க வேண்டும். 

இன்றைய இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் காணப்படுகிறார்கள். அந்த ஆர்வத்தை படிப்பிலும், எதிர்காலத்திலும் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி அடையலாம். என்னுடைய படங்கள் அனைத்தும் குடும்ப பாங்கான படங்கள்தான். அது எந்த விதத்திலும் முகம் சுளிக்காமல் இருக்கும். யதார்த்த சினிமாக்கள் மக்கள் மனதை சென்றடைவதில்லை. ஆனால் கமர்சியல் சினிமாக்கள் விரைவாக மக்கள் மனதை சென்றடைகிறது” என்றார்.

இதையும் படிங்க:'பொன்னியின் செல்வன் 2' முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details