திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் - முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு நேற்று(ஏப்ரல்.23) வந்து தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் அபிராமி அம்மன் படம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கினர். முன்னதாக கட்சிப் பிரமுகர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோபூஜை, கஜபூஜை, செய்து கள்ளவாரணப் பிள்ளையார், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமிஅம்மன், முருகன் உள்ளிட்ட சந்நிதிகளுக்குச்சென்று அவர் சிறப்பு தரிசனம் செய்தார். அப்போது திமுக சீர்காழி ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்டப் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST