Kanthuri Festival 2023: 500 கிலோ ஆட்டுக்கறியில் கைமா பிரியாணி - 20ஆயிரம் பேருக்கு விலையில்லாமல் வழங்கல் - Dindigul Nagalnagar Juma Palliwasal
Kanthuri Festival 2023:திண்டுக்கல்:நாகல்நாகர் ஜூம்மா பள்ளிவாசலில், முகமது நபி நினைவு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 5ம் ஆண்டாக இன்று, பள்ளி வாசல் தலைவர் அகமது புகாரி தலைமையில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, சுட சுட கைமா பிரியாணி வழங்கப்பட்டது. 3 ஆயிரம் கிலோ அரிசி, 500 கிலோ ஆட்டுக்கறி, 600 கிலோ கத்தரிக்காய் கொண்டு செய்யப்பட்ட கைமா பிரியாணியை, நாகல் நகர், வேடபட்டி, ரவுண்டு ரோடு, பேகம்பூர், திருமலைசாமிபுரம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் சாதி, மத வேறுபாடின்றி நீண்ட வரிசையில் நின்று பிரியாணியைப் பெற்று சென்றனர்.