தமிழ்நாடு

tamil nadu

மாவட்ட மைய நூலகம்

ETV Bharat / videos

சேலம் நூலகத்தில் எந்த வசதியும் இல்லை எனக்கூறி மாணவர்கள் போராட்டம்! - மாணவர்கள் போராட்டம்

By

Published : Jun 20, 2023, 10:32 PM IST

சேலம்: சேலம் அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகில்  மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது.இங்கு மத்திய அரசு ,மாநில அரசு மற்றும் ரயில்வே வாரியம் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நூலகத்தில் குடிநீர் வசதி ,கழிப்பறை வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி போட்டி தேர்வர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போட்டி தேர்வர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்: சேலம் மாவட்ட மைய நூலகத்தில் நாளொன்றுக்கு 300 பேர் வரை போட்டி தேர்வுக்குப் படித்து வருகின்றனர். அதேபோல நூலகத்திற்குப் புத்தகம் படிக்க 200 பேருக்கு மேல் தவறாமல் வருகின்றனர்.ஆனால் இங்கு 4 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி,மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவிற்கு  இல்லாமல் இருக்கிறது.

இதுதவிர போட்டி தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு உரிய புத்தகங்கள் இல்லை எனவும் பழைய புத்தகங்கள் மட்டுமே உள்ளன.போட்டித் தேர்வுக்கான புதிய புத்தகங்களை வாங்கி தரவேண்டும். சேலம் மாவட்ட மைய  நூலகத்தில் அடிப்படை வசதிகளைச் செய்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு: திருவாரூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details