மல்லர் கம்பம் போட்டியில் அசத்திய சிறுவர்கள்: சுற்றுலாப் பயணிகள் கண்டுக்களிப்பு! - மல்லர்கம்பம் மல்லர் கயிறு போட்டிகளில் அசத்திய சிறுவர்கள்
திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த 24ஆம் தேதி பிரையண்ட் பூங்காவில் தொடங்கிய கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியில் நேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் லோகசுப்ரமணியன் தலைமையில் மல்லர் கம்பம், மல்லர் கயிறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு சாகசங்களை நிகழ்த்தினர். மல்லர் கம்பம், மல்லர் கயிறு ஆகியவற்றில் தனித்தனியாகவும், குழுக்களாகவும் யோகா நிகழ்வுகளை செய்து காட்டினர். சுற்றுலா பயணிகள் சுற்றி நின்று சிறுவர்களை உற்சாகப்படுத்தி கண்டு ரசித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
கொடைக்கானல் கோடை விழா