தமிழ்நாடு

tamil nadu

3.84 லட்ச விதைப்பந்துகளை உருவாக்கி கல்லூரி மாணவர்கள் உலக சாதனை.

ETV Bharat / videos

3.84 லட்ச விதைப்பந்துகளால் உருவான சந்திரயான் மாதிரி வடிவம்! வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாணவர்கள் முன்னெடுப்பு! - news in tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 12:26 PM IST

தருமபுரி : 3 லட்சத்து 84 ஆயிரம் விதைப் பந்துகளை கொண்டு மிகப் பெரிய அளவில் சந்திரயான் 3 விண்கலத்தின் மாதிரியை வரைந்து பச்சமுத்து கல்லூரி மாணவர்கள் வியக்க வைத்து உள்ளனர்.  

தருமபுரி பச்சமுத்து கல்வி குழும கல்லூரியை சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் மூலம் காடுகளின் நிலப்பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் 3 லட்சத்து 84 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன. தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு, விதைப் பந்துகளை ஒப்படைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்த விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த விதைப் பந்துகளை கொண்டு 182.5 சதுர மீட்டரில், 13.5 மீட்டர் உயரம் கொண்ட சந்திரயான் 3 வின்கலத்தின் மாதிரியை மாணவர்கள் வரைந்தனர். இதனை எலைட் உலக சாதனை அமைப்பினர் நேரில் வந்து ஆய்வு செய்து, மாணவிகளின் முயற்சியை பாராட்டி உலக சாதனைக்கான சான்றிதழ்கள், பதக்கம் உள்ளிட்டவற்றை கல்லூரி தாளாளர் பச்சமுத்துவிடம் வழங்கினர்.

இந்த 3 லட்சத்து 84 ஆயிரம் விதைப் பந்துகளில் அரச விதை, புளியமரம், வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான விதைகளை வைத்து தயார் செய்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த 3 லட்சத்து 84 ஆயிரம் விதை பந்துகளை தருமபுரி, திருச்சி, கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகளில் தூவ திட்டமிட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details