பள்ளி நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த அமைச்சர்.. கொட்டும் மழையில் நனைந்த மாணவர்கள்! - rain issue
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு திடலில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகத்திலேயே ஜோலார்பேட்டையில் தான் இந்த திட்டம் முதன் முதலாகத் துவங்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காகக் காத்திருந்த பள்ளி மாணவிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். அதன் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாமதமாக வந்து சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் பள்ளி மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்ற சம்பவம் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது. மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே இந்த திட்டம் துவங்கப்பட்டது எனத் தெரிவித்தார். ஆனால் அதற்குள் மழை தொடர்ந்து பெய்ததால் நிகழ்ச்சியை முடித்து விட்டுச் சென்றுவிட்டார்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் மழையில் நனைந்தபடி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க உடற்பயிற்சி ஆசிரியர்கள் நிர்ப்பந்தித்தனர். இதன் காரணமாகக் கொட்டும் மழையில் நனைந்த படியே சுமார் அரை மணி நேரம் மாணவர்கள் காத்திருந்தனர்.