வீடியோ: ரயிலில் பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி - ரயிலில் பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி
சென்னை: நவீன் ராஜ் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தாக ரயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆபத்துடன் விளையாடும் மாணவர்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் புறப்படும் போது ஒடிப்போய் ரயிலில் ஏறி, ஒரு காலை ரயிலில் வைத்துக் கொண்டும் மறு காலை ரயில் நடைமேடையில் தேய்த்துக் கொண்டே செல்லும் அந்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாணவர்கள் இந்த ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வது, பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. மேலும் நடைமேடையில் நிற்கும் மாணவன், ஆபத்தாக சாகசம் செய்யும் மாணவனின் கால்களை தட்டி விட முயற்சி செய்யும் விளையாட்டையும் மேற்கோள்கின்றனர். இது தொடர்பாக ரயில்வே காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST