தமிழ்நாடு

tamil nadu

Students Dance

ETV Bharat / videos

பள்ளி கலை விழாவில் குத்தாட்டம் போட்ட மாணவர்கள்! ரஞ்சிதமே பாட்டுக்கு உற்சாக நடனம்! - Viral Video

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 9:40 PM IST

நாட்றம்பள்ளி :திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி கலை விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டறம்பள்ளி வட்டார அளவிலான கலை திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் நாட்றம்பள்ளி பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் இன்று (அக். 21) கலை திருவிழா முடிவற்றது. கலை திருவிழா முடிவை தொடர்ந்து சினிமா உள்ளிட்ட பாடல்கள் ஒலிக்கப்பட்டன. அப்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ஒழிக்கப்பட்டது. இதைக் கண்டு குதூகலம் அடைந்த பள்ளி மாணவர்கள் அந்த பாடலுக்கு ஏற்றவாறு குத்தாட்டம் போட்டனர்.

அதனை தொடர்ந்து ஒலிக்கப்பட்ட நாட்டு புற பாடலுக்கும் மாணவர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். பள்ளியின் அரங்க மேடையின் மீது ஏறி பள்ளி மாணவர்கள் அசத்தல் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். மாணவர்களின் நடனத்தை கண்டு வேறெதும் சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் கண் அயராமல் பார்த்துக் கொண்டு இருந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details