மாநில அளவிலான வில்வித்தை போட்டி; பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு - DMK
கொடைக்கானலில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. திமுக இளைஞரணி சார்பில் நடைபெறும் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியினை லோட்டஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமி ஒருங்கிணைப்பு செய்து நடத்துகின்றது. மாநிலம் முழுவதும் இருந்து வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள், சிறுவர்கள், சிறுமியர்கள், கலந்து கொண்டார்கள். இன்று காலை இந்த போட்டியினை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகர திமுக செயலாளர் முகமது இப்ராஹிம், முன்னிலை வகித்தார். இதனை ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர் .
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST