சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுத்த அண்ணன் ஸ்ரீரங்கநாதர்! - Trichy news
திருச்சி: உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் தைபூசத் தினத்தன்று கொள்ளிடம் ஆற்றங்கரையில் கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமியிடம் இருந்து சீர்வரிசை பெறும் நிகழ்ச்சி மிகவும் சிறப்புக்குரிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கூத்தூர் டோல்கேட் வழியாக வழிநெடுகிலும் தேங்காய், மாப்பூசை வாங்கியபடி கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். பின்னர் ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்கள் தீர்த்தவாரி கண்ட சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டது.