ஸ்ரீரங்கம்: தைத்தேர் திருவிழாவை முன்னிட்டு வெள்ளி யானை வாகனத்தில் பெருமாள் அருள்பாலிப்பு!! - தைத்தேர் திருவிழா
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைத்தேர் உற்சவத்தின் 6ஆம் திருநாளான நேற்று நம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளி வாகனத்தில் வந்த பெருமாளைத் தரிசிக்க ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 3ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST