ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்! - thiruvannamalai news
திருவண்ணாமலை: ஆரணி அருகே புனலப்பாடி கிராமத்தில், கிராம பொதுமக்கள் சொந்த செலவில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவில் புதியதாக அமைக்கப்பட்டு, அதன் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக, ஏற்கனவே அமைக்கப்பட்ட யாகசாலையில் புண்யாஹவசனம் இரண்டாம் கால யாகசாலை ஆரம்பத்து கோபுர கலச பிரதிஷ்டை செய்து நேற்று (மே 22) காலையில் விஸ்வரூபம் கோ பூஜை புண்யாஹவசனம் யாத்ரா தானம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புண்ணிய நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் பூஜித்து, ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸ்ரீ வேணுகோபால் சுவாமி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பின்னர், கோவில் கோபுர கலசத்தில் புண்ணிய நீரை ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், புனலப்பாடி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், திரளாக பங்கேற்று ஸ்ரீவேணுகோபால் சுவாமியை தரிசனம் செய்தனர். இறுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழன்: இளைஞர்களுக்கு கூறும் அட்வைஸ் என்ன?