Video: பவானியில் ஸ்ரீ ஐயப்பன் மண்டல பூஜை விழா! - sabarimala ayyappan
ஈரோடு மாவட்டம் பவானி, குமாரபாளையம் ஸ்ரீ பக்த சரணாலய பக்தர்கள் சார்பில் ஐயப்பன் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் சபரிமலை பாரம்பரிய பூஜை முறைப்படி, ஸ்ரீ ஐயப்பனுக்கு சதுராசன பூஜை, பாலிக்கிருத தேவன், தேவி பூஜை ஆகியவை 48 மண்டல விளக்குகள் கொண்டும், 18 வேத கலசங்கள் கொண்டும் செய்யப்பட்டன. மேலும் சிறப்பு பஜனை பாடல்களும் பாடப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST