Video:சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது மோதிய பைக்:பதைபதைக்கும் காட்சி - சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வனஜா(55). முடிச்சூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக முடிச்சூர் பகுதியில் உள்ள சாலையைக் கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் வனஜா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பைக் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST