திருவள்ளூரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு! - new year celebration
Published : Jan 2, 2024, 9:37 AM IST
திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் உள்ள மனவாள் நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் ஏ ஜி தேவாலயத்தில் 2024 புத்தாண்டை சிறப்பு பிரார்த்தனையுடன் மக்கள் வரவேற்றனர். நேற்று முந்தினம் இரவு சரியாக பத்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பிரார்த்தனை 3 மணி அளவில் முடிந்தது.
இந்த பிரார்த்தனைகள் சபையின் தலைமை போதகர் J. செல்லதுரை 2023ஆம் ஆண்டு மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர வேண்டும் என்றும், புத்தாண்டில் பிரவேசித்திருக்கிற நாம் நுழையும் போது அனைவரும் இயேசுவின் அன்பை பரிமாறி கொள்ள வேண்டும் என்றும், சமாதானமாய் வாழ வேண்டும் என்றும் கூறினார்.
இந்த சிறப்பு ஆராதனையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அனைத்து ஆலயங்களிலும் கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளூர் நகரில் உள்ள வீரராகவ கோயில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் காவலர் தற்கொலை - போலீசார் விசாரணை!