சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு விளக்கு பூஜை... - latest tamil news
தேனி மாவட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிவு பெற்று மகா கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட குத்து விளக்கை ஏற்றி சிறப்பு திருவிளக்கு பூஜை செய்தனர்.
தங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தார் அனைவரும் நலம் பெற வேண்டி, இந்த சிறப்பு திருவிளக்கு பூஜை செய்ததாக பெண்கள் தெரிவித்தனர். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு யாகசாலையில் பூஜை செய்த மஞ்சள் குங்குமம் வழங்கப்பட்டது.