தமிழ்நாடு

tamil nadu

பண்ணாரி மாரியம்மன் கோயில்

ETV Bharat / videos

Aadi amavasai 2023:பண்ணாரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்... திரளானோர் தரிசனம்! - Aadi amavasai 2023

By

Published : Jul 17, 2023, 3:50 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயிலாகும். இக்கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். 

அதே போல், இன்று (ஜூலை 17) ஆடி அமாவாசை(Aadi amavasai) தினம் என்பதால் அதிகாலை முதலே கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. மேலும், கோயில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பெண் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர். 

ஆடி அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Tiruvannamalai BharataNatyam: 407 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை!

ABOUT THE AUTHOR

...view details