அரியலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம்! - மாணவர்களுக்கு முகாம்
Published : Jan 5, 2024, 12:59 PM IST
அரியலூர்: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், இலவச சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம், அக்கல்வி குழும நிறுவனர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மாணவர்களுக்கு சட்டம் குறித்த அடிப்படை விளக்கமும், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் குறித்தும், நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும், சட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதோடு, அது குறித்து உறவினர்கள் மற்றும் சக நண்பர்களுக்கும் விளக்கிக் கூற வேண்டும் என்று அறிவுரை கூறினார். ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு முகாமில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அன்னை தெர்சா நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.