சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் - கன்னியாகுமரி கோயில் திருவிழா
கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உள்ளது. இங்குள்ள 18 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், வெண்ணெய் உள்ளிட்ட 16 வகை அபிசேகங்கள் நடைபெற்றன. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் லட்டும் வழங்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST