Chitra Pournami: சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அகத்தியர் 'கை' முத்திரைக்கு சிறப்பு அபிஷேகம்! - தேனி மாவட்ட செய்தி
தேனி: பெரியகுளம் அருகே ஈச்சமலை ஸ்ரீ மகாலட்சுமி சித்தர் பீடம் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அகத்தியர் முத்திரை சின்னமான கை சின்னத்தை போல் வடிவமைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாக சாலையில் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பதினாறு அடி கொண்ட அகத்தியர் கை முத்திரை சின்னத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக பொருட்கள் கொண்டு வெகு விமரிசையாக அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அகத்தியர் கை முத்திரை சின்னத்திற்கு விஷேஷ பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:சித்ராபௌர்ணமி முழுநிலவு திருவிழா: பச்சை பட்டுடுத்தி அருள்பாலித்த கண்ணகி தேவி!
இதையும் படிங்க:Kallalagar: தேனியில் ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கிய இரண்டு கள்ளழகர்கள்!