தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா

ETV Bharat / videos

நெல்லையில் சமத்துவ பொங்கல் விழா: ஒயிலாட்டத்துடன் களைகட்டிய விழாவில் சபாநாயகர் பங்கேற்பு - Pongal festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 11:21 AM IST

திருநெல்வேலி:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் - அஞ்சுகத்தம்மாள் சிலை அமைப்புக்குழு சார்பில் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (ஜன.16) பொங்கல் விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு முன்பு உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த பெண்கள் 200 பானைகளில் சமத்துவ பொங்கல் இட்டனர். சமத்துவ பொங்கலை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கரகாட்டம், ஒயிலாட்டம், குதிரை ஆட்டம், மாடாட்டம், கிழவன் கிழவி ஆட்டம், கம்பாட்டம், நையாண்டி மேளம், நாதஸ்வரம் என பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

இதில் கருணாநிதியால் கலைமாமணி விருது பெற்று தற்போது வரை கிராமிய கலையில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  

ABOUT THE AUTHOR

...view details