தமிழ்நாடு

tamil nadu

கர்நாடக பாஜக அலுவலகத்தில் புகுந்த பாம்பு

ETV Bharat / videos

கர்நாடக பாஜக அலுவலகத்தில் புகுந்த பாம்பு - Snake into Basavaraj Bommai constituency office

By

Published : May 13, 2023, 2:57 PM IST

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதனிடையே, பசவராஜ் பொம்மை போட்டியிட்ட ஷிகாகோன் தொகுதியில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில், இன்று காலை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. 

இதனையடுத்து, பாம்பு அங்கிருந்து மீட்கப்பட்டு, காட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அது மட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் பசவராஜ் பொம்மை முகாம் அலுவலகத்திற்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் நிகழ்ந்துள்ளது. 

மேலும், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 92 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக, 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் 12  இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், பசவராஜ் பொம்மை 1 லட்சத்து 16 வாக்குகள் பெற்று ஷிகாகோன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 

ABOUT THE AUTHOR

...view details