Video: புற்றுக்கண் மாரியம்மன் முன்பு நடனமாடிய நாகம்.. வைரலாகும் வீடியோ! - Velandipalayam covai
கோவை மாவட்டம், வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பு படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோவையிலிருந்து தடாகம் செல்லும் சாலையில் உள்ள வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்குப் புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இக்கோயில் உள்ளது. மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில், முருகன் கோயில் உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிந்து செல்வோர் எல்லோரும் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கமான ஒன்று.
இதனிடையே இக்கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று (மார்ச்.10) மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த ஒரு நாகம் அம்மன் காலடியில் படமெடுத்த படி நின்றுள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் தங்களது செல்போனில் படமெடுத்து நின்ற பாம்பை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.