சாலையில் பின்னிப் பிணைந்து நடனமாடிய பாம்புகள்! - சாலையில் பாம்பு டான்ஸ்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்து உள்ள நந்திமங்கலம் செல்லும் சாலையில் நேற்றைய முன்தினம் (ஜூலை 26) இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்து உள்ளது.இவ்வாறு சாலையில் பாம்புகள் நடனமாடுவதை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து உள்ளனர். அப்போது அந்த பாம்புகளை தொந்தரவு செய்யாமல், பாம்புகள் நடனமாடும் காட்சியை நின்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அது மட்டுமல்லாமல், இதனை அங்கிருந்த ஒரு நபர் அவரது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த நிலையில், பாம்பு நடனமாடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் பாம்புகளின் நடனத்தை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் காட்சியும், இளைஞர் ஒருவர் சைக்கிளில் வந்து பெல் அடித்து அந்த பாம்புகளை விரட்டும் காட்சியும் உள்ளாதால், அதற்கு பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.