வால்பாறை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை.. பொதுமக்கள் உஷார்! - coimbatore elephant
கோவை: வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ளது குரங்குமுடி எஸ்டேட். இப்பகுதியில் 12ஆம் நம்பர் காட்டுப் பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. தற்போது அந்த காட்டு பகுதியின் தேயிலைத் தோட்ட பகுதிக்குள் அதிக அளவில் பலா மரங்கள் உள்ளது.
இந்த ஒற்றைக் காட்டு யானை மரத்தின் மீது இருக்கும் பழங்களை உடைத்துச் சாப்பிடுவதற்கு அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பயத்திலும் அச்சத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பால் பண்ணை உரிமையாளரை மிரட்டிய பாஜக, விசிக நிர்வாகிகள் மீது வழக்கு!
எனவே அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் குடியிருப்பு பகுதிக்குள் வராத வண்ணம் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாகுபலி யானையை இடமாற்றம் செய்ய வனத்துறை முடிவு