’விரைவில் சிலம்பமும் ஒலிம்பிக்ஸில் சேரும்..!’ - சிலம்பாட்ட சங்க மாநிலத் தலைவர்! - நாகர்கோவிலில் சிலம்பப் போட்டி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஐந்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். உலக அளவில் சிலம்பம் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும்; ஒலிம்பிக்கில் விரைவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகவும் சிலம்பாட்ட சங்க மாநிலத்தலைவரும், ஐநாவின் இந்தியபிரதிநிதியுமான சந்திரமோகன் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST