திருப்பதியில் திடீர் விசிட் கொடுத்த ஜவான் படகுழுவினர்..வைரல் வீடியோ - jawaan movie release date
Published : Sep 5, 2023, 5:51 PM IST
ஹைதரபாத்:பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி, இம்மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ள படம் ஜவான். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஜவான் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான், படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தந்து, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
முன்னதாக ஜவான் படத்தின் சில பாடல்களும், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், திபிகா படுகோன் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
குறிப்பாக இயக்குநர் அட்லீ, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய்யுடன் இணைந்து வெற்றி படங்களை இயக்கியுள்ள நிலையில், ஜவான் படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜவான் படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.