சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 7-ம் கால யாகசாலை பூஜை: ஜப்பான் நாட்டினர் பங்கேற்பு! - temple festival
மயிலாடுதுறை:சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் 3 நிலைகளில் காட்சி தருகிறார். மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
ஆகையால் கடந்த 20 ஆம் தேதி 8 ஆம் கால யாகசாலை பூஜைகளில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சுவாமி, அம்பாள், தோணியப்பர், சட்டைநாதர், முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று, 120 வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இறுதியில் பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று நடைபெற்ற ஏழாம் கால யாகசாலை பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.