கோவை ஐடி ரெய்டு அட்ராசிட்டீஸ்.. வெஜ் பிரியாணி உடன் ஆதரவு தரும் திமுகவினர்! - Veg biriyani for DMK
கோவை:தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (மே 26) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், அமைச்சருக்கு சொந்தமாக சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், அவரது உறவினர் அரவிந்த மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடு, அலுவலகங்கள் மற்றும் பண்ணை வீடுகள் ஆகிய இடங்களில் மேற்பட்ட வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். மேலும், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே இருக்கும் பணப்பட்டி கிராமத்தில் உள்ள சங்கர் ஆனந்த் கல்குவாரி மற்றும் எம்சாண்ட் யூனிட்டுகளில் இன்று காலை முதல் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டின் முன்னால் கூடிய அவரது ஆதரவாளர்களுக்கு முதலில் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் மற்றும் சேர் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிலையில், தயிர் பச்சடி உடன் கூடிய வெஜ் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.