தமிழ்நாடு

tamil nadu

செங்கோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்

ETV Bharat / videos

செங்கோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்!

By

Published : Jun 12, 2023, 11:14 AM IST

மயிலாடுதுறை:ஆகஸ்ட் 1947 இல் நேருவுக்கு  திருவாவடுதுறை ஆதீனம் அளித்த செங்கோலுக்கு எந்த ஆதரமும் இல்லை என சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் செங்கோல் கொடுத்த நிகழ்வை ஆதீன சுவற்றில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் கல்வெட்டாக திறந்து வைத்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுத்து அதன் பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நிறுவ கடந்த மாதம் திருவாடுதுறை ஆதீனகர்த்தர் தனி விமானத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்களுடன் இணைந்து டெல்லி சென்று பிரதமருக்கு செங்கோலை வழங்கினார்.

அதன் பின் செங்கோல் குறித்து சர்ச்சைகள் எழுந்தன, அதில் 1947 இல் இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்று பல்வேறு தரப்பினர் சர்ச்சைகள் எழுப்பினர். இது குறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மடத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளி சுவற்றில் செங்கோல் வழங்கும் நிகழ்வை கல்வெட்டாக பொறித்து நேற்று (ஜூன் 11) திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சிறப்பு பூஜைகள் செய்து திறந்து வைத்தார்.

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீல ஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தனது ஜென்ம நட்சத்திரமான வைகாசி - பூரட்டாதி விழாவின் ஒரு பகுதியாக இந்த கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details