தமிழ்நாடு

tamil nadu

விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போடவில்லை என்றால் உங்கள் கதை முடிந்தது என சீமான் பேச்சு

ETV Bharat / videos

விவசாயி சின்னத்திற்கு ஓட்டுப் போடவில்லை என்றால் உங்கள் கதை முடிந்தது - சீமான் பேச்சு - கருப்பட்டி

By

Published : Jun 21, 2023, 10:27 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, "பனை மரக்களில் இருந்து கிடைக்கும் கருப்பட்டிக்கு தான் உலக நாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பனை பால், தென்னை பால், மூலிகைச்சாறு என்று பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்வோம். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்த உடன் பனை மரங்கள் அதிக அளவில் நடப்படும். பனை மரம் என்பது பெரிய அளவிலான புல் அதன் நுனி முதல் அடி வரை பயன்தரும். பனை மரங்களை நடுவதற்கு ஆயிரக்கணக்கான ஆட்களை வேலைக்கு எடுப்பேன்.

ஏதாவது பார்த்து பண்ணி விடுங்கள். அடுத்து நாடாளுமன்றத் தேர்தல், அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நீங்கள் இரட்டை இலை, உதயசூரியனை மறக்கிறீர்களோ அன்றுதான் இந்த நாடும் நாட்டு மக்களும் உருப்படுவார்கள். 

விவசாயி சின்னத்திற்கு நீங்கள் ஓட்டுப் போடவில்லை என்றால் உங்கள் கதை முடிந்தது. நடிகர் ரஜினி கூறியது போல் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. தேசப்பற்றை பற்றி பேசும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் ராணுவத்தில் உயிரிழந்தால் நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. எட்டு கோடி மக்களோடு கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி எங்கள் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details