தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடிப்பூர திருவிழா

ETV Bharat / videos

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடிப்பூர திருவிழா! - today news

By

Published : Jul 23, 2023, 2:14 PM IST

Updated : Jul 23, 2023, 3:13 PM IST

விருதுநகர்: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் மற்றும் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் ஆகியோர் அவதரித்த திருத்தலம் என்றும், 108 திவ்ய தேசங்களில் 99வது திவ்ய தேசம் என்றும் புகழக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பெருமை வாய்ந்தாகும். கோயிலின் முக்கிய தெய்வமான ஆண்டாள் ஆடி மாதத்தின் பூரம் நட்சத்திர நாளன்று அவதரித்ததால் இந்நாள் ஆண்டாளின் பிறந்ததினமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் ஆண்டாள் தேவியின் பிறந்த நாளைக் கொண்டாடும் திருவிழா, லட்சுமி தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆடிப்பூரம் திருவிழா கடந்த ஜூலை 22அன்று தொடங்கியது.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழாவில் பெரிய தேர் இழுக்க வீதிகளில் குவிந்தனர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேர் என பெருமை கொண்ட இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் கும்மியாட்ட கலை நடைபெற அதிமுக உறுதுணையாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி

Last Updated : Jul 23, 2023, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details