Video: போதையில் ஸ்கார்பியோ ஓட்டி இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து - சத்தாரா மாவட்டம்
மகாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள கர்வே கிராமத்தில் அதிவேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த இரண்டு பைக்குகளின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், பைக்கில் வந்த ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில், மற்றொருவர் காரின் பம்பருக்கு அடியில் படுகாயமைடந்தார். இரண்டாவது பைக்கில் வந்தவரும் பலத்த காயம் அடைந்த நிலையில், மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுநர் மது அருந்திவிட்டு கார் ஒட்டியது உறுதியானதை அடுத்து, அவரை போலீசார் காவலில் வைத்துள்ளனர். தற்போது, விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST