Zero Shadow Day: நிழல் இல்லா நாளை ரசித்த நெல்லை மாணவர்கள்! - மகர ரேகை
திருநெல்வேலி: நிழல் இல்லாத அதிசய நிகழ்வைக் கண்டு ரசித்த மாணவர்கள். கடக ரேகை, மகர ரேகைக்கு மத்தியில் சூரியன் வரும் போது நம்முடைய நிழல் நமக்கு 90 டிகிரியில் விழுவதால் ஒரு நிமிடம் மட்டும் பகல் பொழுதில் நிழல் தெரியாது. இந்த நிகழ்வை நிழல் இல்லாத நாள் என அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும் இந்த நிகழ்வைக் காண இன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதைப் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இவ்வாறு நடக்கும் நிகழ்வுகளை வைத்து கோள்களின் சுற்றளவு, எடை மற்றும் சுழற்சியின் வேகம் ஆகியவற்றை அறிஞர்கள் கண்டறியப்படப்படுகின்றது.
ஆண்டுதோறும் நெல்லையில் இன்றும் ஆகஸ்ட் 30 ம் தேதியும் இந்த நிகழ்வைப் பார்க்க முடியும் என்பதனால் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னையில் நிழல் இல்லா நாள் தெரியும் என நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!