தமிழ்நாடு

tamil nadu

இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்

ETV Bharat / videos

நாட்றம்பள்ளி அருகே பைக்கில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்! - natram palli

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 1:30 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் நாட்றம்பள்ளி பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் பலர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்தனர். 

இந்த நிலையில், கலைத் திருவிழா முடிந்த பின்பு, ஒரு இருசக்கர வாகனத்தில் 6 பள்ளி மாணவர்கள் ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இதனை கருத்தில் கொண்டு, 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களுக்கு முறையான அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details