பொங்கல் விழா - நாட்டுப்புறக் கலைகளை ஆடி அசத்திய பள்ளி மாணவர்கள் - பள்ளி மாணவர்கள்
சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நமது பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான உண்மையான கரகத்தினை தலையில் ஏந்தி தொழில்முறை கலைஞர்களை விஞ்சும் அளவிற்கு கண் இமைகளில் ஊசியை எடுத்தும், ஏணியின் மீது ஏறியும், கண்ணாடி டம்ளர்கள் மீது ஏறியும், வாய்களில் பாட்டில்களை பிடித்தும் ஆடியதுடன் மாணவர்கள் பறை இசைத்தும் பொய்க்கால் கட்டியும் அசலாக ஆடினர். இது அனைவரிடையேயும் வரவேற்பைப் பெற்றது. இறுதியாக பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மொத்தமாக குத்தாட்டமும் ஆடி மகிழ்ந்தனர்.