ஐஸ் கட்டியில் டைவ்.. புதிய உலக சாதனை.. அசத்திய திருச்சி பள்ளி மாணவர்கள்! - Trichy
திருச்சி:விமான நிலையம் செம்பட்டு அருகே உள்ள ஆல்பர்ட் மார்சல் ஆர் சி நர்சரி பள்ளியில் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உலகச் சாதனை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஐஸ் கட்டியின் மீது நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் அனிருத் கார் வீல் முறையில் 300 மீட்டர் தூரம் டைவ் அடித்து சென்று உலக சாதனையை நிகழ்த்தினார்.
இதேபோல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஜமீல் இப்ரான் ஐஸ் கட்டி மீது 300 மீட்டர் தூரம் ரவுண்ட் ஆஃப் முறையில் டைவ் அடித்து உலக சாதனை நிகழ்த்தினார்கள். இந்த மாணவர்கள் இருவருக்கும் ’சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ நிறுவனர் நீலமேகம் என்கிற நிம்லன் மற்றும் மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன் நிலையில் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புதிய சாதனையை நடத்தி காட்டினார்கள்.
அதனைத் தொடர்ந்து இந்தப் புதிய உலக சாதனை படைத்த மாணவர்களுக்குத் தொழில் அதிபர் அலெக்ஸ் ராஜா, சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தார். இந்த உலக சாதனையில் நான்காம் வகுப்பு மாணவன் அனிருத் முதல் பரிசு பெற்றார். ஜந்தாம் வகுப்பு மாணவன் ஜமீல் இப்ரான் இரண்டாம் பரிசு பெற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜிம்னாஸ்டிக் மாஸ்டர் ஆண்டனி லெனின் செய்து உள்ளார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.