தமிழ்நாடு

tamil nadu

அப்துல் கலாமின் 92 உருவப்படங்கள் வரைந்து பள்ளி மாணவர்கள் அசத்தல்

ETV Bharat / videos

Abdul Kalam Birth Anniversary: 92 அப்துல் கலாம் ஓவியங்களை வரைந்த பள்ளி மாணவர்கள்! - abdul kalam portraits

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 4:18 PM IST

ஈரோடு: 'கனவு காணுங்கள்' என்னும் ஒற்றை வாசகத்தில் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் லட்சிய பாதையை நோக்கி பயணிக்க வைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 92வது பிறந்தநாளான இன்று (அக்.15) 92 அப்துல்கலாம் உருவப்படங்களை வரைந்து சத்தியமங்கலத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் அசத்தி உள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் 92ஆவது பிறந்தநாளான இன்று, சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாமின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, அப்துல்கலாமின் 10 கட்டளைகளை பின்பற்றி வாழ்வில் மேம்பட பள்ளி மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், அப்துல் கலாமின் பொன்மொழிகள் மாணவ, மாணவியர்கள் மனங்கள் மற்றும் நினைவில் தொடர வேண்டும் என்ற நோக்கிலும், அவரது 92ஆவது வயதை போன்றும் வகையிலும் அப்துல் கலாம் உருவத்தை வண்ணப் பொடியில் வரைந்து பள்ளி மாணவர்கள் அசத்தினர். 

அப்துல் கலாமின் நாட்டுப்பற்று, கல்வி, தியாகம் மற்றும் நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு குறித்தும் மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும் ஒவ்வொரு மாணவரும் 5 ஏழை குழந்தைகளை படிக்க வைப்போம் என்று உறுதிமொழியும் ஏற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details